
மனமாற வாழ்த்தும்
இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றிப் பாடி கொண்டாடுவோம் ஆர்ப்பரித்து அகமகிழ்வோம் இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே!
அன்பெனும் பண்புகளை ஆணித்தரமாய் சொல்லிவிட ஆயுளையே அவர் கொடுத்தார் அகிலத்தின் விடுதலைக்காய் அவர் பிறந்த நாளின்று அறியாமை போக்கிடுவோம் பகைமையதை மறந்திடுவோம் பாசத்தோடு வாழ்ந்திடுவோம்!
இந்த இனிய கிறிஸ்துமஸ் திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும், குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் நான் கர்த்தரிடம் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
